தேவதை கொடுத்த புதையல் | தேவதை கதைகள் | The Treasure Given By The Angel | Stories In Tamil Fairy Tales
ஒரு நாள் ஒரு ஏழை மனுஷன் காட்டுப் பாதை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் காலை முழுவதும் ரொம்ப கடினமாக வேலை செய்திருந்தான். அதனால் ரொம்ப பசியுடன் இருந்தான். அவன் சாப்பாட்டை கையில் வைத்துக் வைத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்தான்.
அவன் ஒரு பழைய பெரிய ஆமணக்கு எண்ணை மரத்து கிட்ட ஒரு இடம் கண்டு பிடித்தான். அன்று நல்ல காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு அழகான நாள். அப்போ அவன் தான் சாப்பாடு வைத்திருந்த டப்பாவை திறந்தான் அவன் சாப்பிட கொஞ்சம் சாப்பாடு மட்டுமே அதில் இருந்தது.
சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் கூட அவனுக்கு பசித்தது. அவன் அவங்க இருந்து கிளம்ப தயாரான நேரத்தில் அந்த மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் அவன் பக்கத்தில் கீழே விழுந்திருச்சு. அந்த ஆப்பிள் எங்க இருந்து வந்திருக்கு என்று அவன் மேலே பார்க்கும்போது ஒரு சின்ன அழகான தேவதை மரத்தின் கிளையில் இருப்பதை பார்த்தான்.
அவள் வண்ணமயமான சின்ன இறக்கைகளோடு புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு இருந்தாள். அந்த ஏழை மனுஷன் இதுக்கு முன்னாடி ஒரு தேவதையை பாத்ததே இல்ல. அதனால் ரொம்ப ஆச்சரியமா பார்த்தான்.
தேவதை அந்த மனுஷனிடத்தில் பேச தொடங்கினாள். “வணக்கம் என் நண்பனே! நீ ஏன் இவ்வளவு சோகமா இருக்க.” “வணக்கம் தேவதையே! நான் ரொம்ப ஏழை என்கிட்ட சாப்பிடக் கூட சரியா பணம் இல்லை. நான் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்யுறேன். ஆனால் நான் வாழ்வதற்கு என்கிட்ட பணம் பத்தவில்லை” என்று அந்த மனுஷன் கவலைபட்டான்.
“சரி நான் உனக்கு உதவி செய்கிறேன் நண்பனே. கவலை படாதே” என்று சொல்லி தேவதை தன் புல்லாங்குழலால் ஒரு சில ராகங்களை வாசிச்சதுக்கு அப்புறம் ஒரு பெரிய மண்வாரி அந்த மனுஷன் முன்னாடி வந்துச்சு. “இந்த மண்வாரியை எடுத்து இந்த மரத்த சுத்தி இருக்கிற மண்ணைத் தோண்டு அப்போது நீ ஒரு அழகான புதையலை கண்டுபிடிப்பாய். அதை வைத்து நீ வாழ போறகின்ற நாட்களை சந்தோஷமாக வாழலாம்.” என்றாள் தேவதை.
அந்த மனுஷன் தேவதைக்கு நன்றி சொன்னான். தேவதை சிரிச்சிக்கிட்டே புல்லாங்குழலில் சில ராகங்களை பாடி கொண்டு பறந்து போனது. அந்த மனுஷன் மண்ணை தோண்டிக் கொண்டே இருந்தான். மதிய நேரம் ஆயிடுச்சு ஆனால் அந்த மனுஷன் இப்படி ஒரு புதையல் உண்மையாவே இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமாய் இருந்தான்.
சீக்கிரமாவே ஒரு ஆழமான குழி தோண்டினான். அப்போது திடீரென டாங், டாங் என்று சத்தம் கேட்டுச்சு. அப்போது அந்த மனுஷன் அது என்னவென்று பார்த்தான். அது ஒரு தங்க புதையல் பெட்டி. அந்த பெட்டியை திறந்த போது அது முழுக்க வைரங்கள், மாணிக்கங்கள் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் இருந்தது.
அந்த மனுஷன் ரொம்ப சந்தோஷப்பட்டான். ஆனால் திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது. இதெல்லாம் என்னோடது இல்லை. நான் இதை திருடுவது போல ஆயிடும். இங்க ஒரு பொருள் ஒரு குடிமகனுக்கு சொந்தமானது இல்லையோ அந்த பொருள் ராஜாவுக்கு தான் சொந்தம்.
தேவதை என்னிடம் தங்கத்தை எடுக்க சொன்னாங்க. ஆனா நான் இத ராஜாகிட்ட கொண்டு போய் அவருடைய அனுமதி கேட்க போறேன் என்று அந்த மனுஷன் வேகமா நடந்து ராஜாவின் அரண்மனைக்குப் போனான்.
அவன் ராஜாவுக்கு முன்னாடி நிற்கும்போது ராஜா கேட்டார் “சொல்லு ஏழை மனுஷனே நீ எதுக்கு இங்க வந்த. உன் கையிலிருப்பது என்ன?”
“ராஜாவே இன்னிக்கு நான் மதிய உணவு சாப்பிடும் போது ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துச்சு. ஒரு தேவதை வந்து அந்தப் பழைய அமணக்கு எண்ணெய் மரத்தை சுற்றி தோண்ட சொன்னாங்க. அங்க புதையல் கிடைக்கும் என்று சொன்னதுனால நான் தோண்டினேன். அப்போது எனக்கு இந்த புதையல் கிடைச்சுது.
இந்த புதையலை நானே வைத்துக் கொள்ள்லாமா என்று எனக்குத் தெரியவில்லை. இது வேற யாருக்காவது சொந்தமானதாக இருக்கலாம். நான் இதை திருட விரும்பல” என்றான்.
அந்த ஏழை மனுஷன் ராஜாகிட்ட அவன் கொண்டு வந்த புதையலை கொடுத்துட்டான். “ம்… நீ கண்டுபிடித்தது ஒரு நல்ல புதையல் என் நண்பனே ஆனால் உன் நேர்மை தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என் அரண்மனையில் வேலை செய்ய எனக்கு விசுவாசமான ஒரு ஆள் தேவை நான் உனக்கு வேலை தரேன்.
இந்த ராஜ்யத்தில் இருக்கிற எல்லா மாணிக்கங்கள் மற்றும் எல்லா வைரங்களுடைய பொறுப்பு உன்னோடது. உன் நேர்மை எங்களுக்கு ஒரு பரிசு. எப்போதும் நேர்மையாக வேலை செய். நீ இங்க சந்தோஷமாய் வேலை பார்க்கலாம். இந்தப் புதையலை நீயே எடுத்துக்கோ நீதான் இதை வச்சுக்கணும். தேவதை உனக்கு இதை பரிசாக கொடுத்தாங்க மற்றும் உன் விசுவாசத்திற்காக நானும் பரிசாக கொடுக்கிறேன்” என்றார் ராஜா.
“நான் உங்ககிட்ட வேலை செய்ய ரொம்ப ஆசைப்படுறேன் ராஜாவே நான் உங்களுக்காக கடினமாகவும், நேர்மையாகவும் தினமும் வேலை செய்வேன் என்று உங்களுக்குச் சத்தியம் செய்றேன்” என்றான்.
அவனுடைய வாழ்க்கை அந்த நாளில் இருந்து மாறியது ஆனால் அவன் விசுவாசம், நேர்மை மட்டும் மாறவே இல்லை.
Tq this use