சாமியாரும் சிஷ்யனும் | சிறுவர் கதைகள் | The Preacher And The Disciple | Sirukathaigal

சாமியாரும் சிஷ்யனும் | சிறுவர் கதைகள் | The Preacher And The Disciple | Sirukathaigal

முன்னொரு காலத்துல ஒரு கிராமத்துல ஒரு சாமியார் இருந்தார். அவர் பூஜை மற்றும் பிரார்த்தனைகள் செய்து கொஞ்சம் பணம் சம்பாதிச்சிட்டு இருந்தாரு. அவர்கிட்ட நிறையவே பணம் இருந்துச்சு. அவரு அந்த பணத்தை எல்லாம் ஒரு பையில போட்டு தன் கூடவே வச்சுப்பாரு. 

அந்த கிராமத்துல இருந்த ஒரு திருடன், கொஞ்ச நாளாக அந்த சாமியாரோட பணத்தை திருட திட்டம் போட்டுக்கிட்டு இருந்தான். இந்தத் திருடன் ஒரு நாள் அந்த சாமியார் கிட்ட போய், “சாமியாரே என்ன உங்களோட சிஷ்யனாக ஏத்துக்கோங்க” அப்படின்னு கேட்டான். அந்த சாமியார் உடனே சரினு சொல்லிட்டாரு.

இந்தத் திருடன் ரொம்ப நல்லவன் போலும், ஒன்னும் தெரியாத அப்பாவி போலவும் நடித்து இந்த சாமியார் மனசுல இடம் பிடிக்க நினைத்தான். ஒரு நாள் இன்னொரு சிஷ்யன் பக்கத்து கிராமத்தில் பூஜை இருப்பதாக சொல்லி அந்த சாமியாரை கூப்பிட்டான். அவரும் சரின்னு சொல்லிட்டு, அந்த திருடனை தான் கூடவே கூட்டிட்டு அந்த கிராமத்துக்கு புறப்பட்டார்.

அவங்க போற வழியில ஒரு நதியை பார்த்தாங்க. அப்போ அந்த சாமியார் அந்தத் திருடன் கிட்ட, “மகனே, நான் இந்த நதியில குளிக்க போறேன். அதனால என்னோட பொருளையும்,  பணத்தையும் பத்திரமா பாத்துக்கோ” என்று சொல்லிட்டு அந்த திருடன் கையில் எல்லாத்தையும் கொடுத்துவிட்டு அவர் அந்த நதியில் குளிக்க போனார்.

இப்படி ஒரு நேரத்தை எதிர்பார்த்து இருந்த அந்தத் திருடன், சாமியார் தன் கிட்ட கொடுத்த எல்லா பொருட்களையும், பணத்தையும் எடுத்துட்டு ஓடிட்டான். அந்த சாமியார் குளிச்சிட்டு கரைக்கு வந்து பார்த்தபோது அவரோட சிஷ்யனை எங்கேயுமே காணவில்லை.

அப்போதான் அவருக்கு தெரிந்தது அவன் தன்னோட பணத்தை எடுத்துட்டு ஓடிட்டான்னு. அப்போதுதான் அந்த சாமியார் ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டாரு, “முன்ன பின்ன தெரியாதவங்கள எப்பவுமே கண்மூடித்தனமாக நம்ப கூடாது” என்று.



Leave a Comment