ஒட்டகமும் நரியும் | சிறுவர் கதை | The camel and the fox | small story in tamil
லம்பா என்னும் ஒட்டகமும் சோட்டு என்னும் நரியும் மிக நெருங்கிய நண்பர்கள். அவை ஒரு அழகான நதிக்கரையில் வாழ்ந்து வந்தனர். நதியின் எதிர்க்கரையில் ஒரு கிராமமும் ஒரு கரும்புத் தோட்டம் இருந்தன. ஒரு நாள் சோட்டுவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
சோட்டு சொன்னது, “ஹே லம்பா அந்த தோட்டத்தில் உள்ள கரும்பு ருசியா இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இன்று இரவு ஆற்றை கடந்து தோட்டத்துக்கு போய் விடலாமா” என்று கேட்டது. “ஆனா கிராமத்தில் உள்ள மக்கள் பாத்துட்டா நம்மள அடிக்க மாட்டாங்களா?” என்று ஒட்டகம் கவலையுடன் சொன்னது.
“கவலைப்படாதே நீ எனக்கு உதவி பண்ணு அதே மாதிரி நான் உனக்கு உதவி பண்ணுகிறேன்” என்று நரி உற்சாகமாக கூறியது. ஒட்டகத்திற்கு அதில் விருப்பமில்லை, ஆனாலும் அதற்கு சம்மதித்தது.
அன்றிரவு ஒட்டகம் நரியை முதுகில் சுமந்துகொண்டு நதியை கடந்து சென்றது. அவை கரும்பு தோட்டத்திற்கு சென்று சுவையான கரும்புகளை சாப்பிடத் தொடங்கின. நிறைய சாப்பிட்டு அவற்றின் வயிறும் நிறைந்தன.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, சந்தோசமா இருக்கும் போதெல்லாம் எனக்கு பாட்டு பாட தோனும்” என்றது நரி. ஒட்டகம் பதில் சொல்வதற்கு முன்பே நரி சத்தமாக ஊளையிடத் தொடங்கியது. ஒட்டகம் நரியை ஊளை இடாமல் இருக்கும்படி சொன்னது. ஆனால் நரி ஊளை இட்டு கொண்டே இருந்தது.
இதை கேட்ட கிராம மக்கள் வெளியே ஓடி வந்தார்கள். ஒட்டகம் மிகவும் பயந்து போயிற்று, அது சுற்றும் முற்றும் பார்த்தது நரியை எங்கேயும் காணவில்லை. நரி புதருக்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டிருந்தது.
கிராம மக்கள் ஒட்டகத்தை தடியால் அடித்து விரட்டினார்கள். கிராம மக்கள் அனைவரும் சென்ற பிறகு வெளியே வந்த நரி “ஹா ஹா ஹா நல்லா மாட்டிகிட்டியா?, பாத்தியா உன்னால எங்கேயும் ஒளிஞ்சிக்க முடியல”என்று கேலி செய்தது.
“சுயநலகார நரியே உனக்கு நான் பாடம் சொல்லித்தரேன் பாரு” என்று முனுமுனுத்தது ஒட்டகம். பின்னர் ஒட்டகமும் நரியும் நதியை கடந்து வர ஆரம்பித்தன. நதியின் மையப் பகுதிக்கு வந்தபோது ஒட்டகம் ஒன்றும் செல்லாமல் நின்றது.
“உனக்கு பாட்டு பாட தோனுற மாதிரி எனக்கு இப்போ கால நீட்ட தோணுது” என்றது ஒட்டகம். “நான் விழுந்திடுவேன் அப்படி பண்ணாதே” என்று கெஞ்சியுது நரி. “சுயநலம் புடிச்ச உன்ன பத்தி நான் எதுக்கு கவலை படனும்” என்று காலை நீட்டியது ஒட்டகம், நரி கீழே விழுந்தது.
நீதி :தீய செயல்களால் தீமையே விளையும்.