புலி மற்றும் பயணி | சிறுவர் கதைகள் | Tiger and traveler | Moral Values Stories In Tamil
முன்பு ஒரு காலத்தில் காட்டில் ஒரு புலி இருந்துச்சு. புலிக்கு ரொம்ப வயசானதுனால வேட்டையாட முடியலை. ஒரு நாள் நதிக்கு பக்கமா போகும் பொழுது புலி ஒரு தங்க வளையலை பாத்துச்சு.
அந்த வளையலை பார்த்து நான் இதை எடுத்துக்குறேன். இது எனக்கு உபயோகமாய் இருக்கும் என யோசித்து. அந்த வளையலை எடுத்துக்கிட்டு சாப்பாட்டுக்காக அங்கயே காத்துக்கொண்டு இருந்துச்சு.
அந்த சமயத்தில் நதிக்கு அந்தப் பக்கமா ஒரு ஆளு பயணம் செய்து கொண்டிருந்தான். அந்த ஆள பார்த்த உடனே புலி நெனச்சுது தனக்கான சாப்பாடை கண்டுபிடிச்சுட்டேன் என உள்ளுக்குள்ளேயே சிரிச்சது.
பிறகு அந்த ஆளை பார்த்து “ஐயா உங்களுக்கு இந்த தங்க வளையல் வேண்டுமா? இதனால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை.” என்று கேட்டது புலி. இதை கேட்ட அந்த ஆள் யோசிக்க ஆரம்பித்தான்.
அது உண்மையாகவே ஒரு தங்க வளையல் ஆனால் அங்கு ஒரு புலி இருக்கு அது ரொம்ப ஆபத்தான மிருகம் என்ன செய்வது என்று யோசித்து புலியை பார்த்து “அந்த தங்க வளையல் எனக்கு வேணும் ஆனா உன்னை எப்படி நம்புவது” என்று கேட்டான் அந்த மனுஷன்.
“நீ சொல்றது உண்மைதான் நான் கெட்டவனா இருந்தேன். ஆனால் நான் இப்போ ரொம்ப நல்லவனா மாறிட்டேன். ஒரு சாமியார் என்னை நல்லவரா மாத்திட்டாரு இப்போது நான் யாரையும், எதையும் செய்ய மாட்டேன்” என்று சொன்னது புலி.
“ஆனா நான் உன் கிட்ட வந்தா, நீ என்ன வாசனை புடிச்சு அந்த சாமியார் சொன்னதை மறந்து என்ன சாப்பிட்ட நான் என்ன செய்வது “ என்று கேட்டான் பயணி.
“நான் உன்னை சாப்பிடணும்னு யோசிச்சாலும் என்னால சாப்பிட முடியாது ஏன்னா எனக்கு வயசு ஆயிடுச்சு என்னோட கால்களும் பலவீனமாக ஆயிடுச்சு. அதனால என்கிட்ட வந்து இந்த வளையலை எடுத்துக்கோ” என்று சொன்னது புலி.
இது கேட்ட உடனே அந்த ஆளு நதிக்குள்ள போய் தங்க வளையலை வாங்கிரலாம் என்று யோசித்தான். அவன் தண்ணிக்குள்ள போன உடனே அதில் மாட்டிக் கொண்டான்.
உடனே புலியிடம் சத்தமா உதவி கேட்டான். நேர்மையாய் இருக்கிறது மாதிரி நடிச்சு “ஐயோ நீங்க தண்ணிக்குள்ள மாட்டிக் கொண்டீர்களா இருங்க நான் வந்து உங்களை காப்பாற்றுறேன்” என்று சொல்லி புலி தான் உண்மையான புத்தியை காட்டி அந்த மனுஷனை தாக்க தண்ணிக்குள்ள குதித்தது.
அந்த மனுஷன் தன் தப்பா உணர்வதற்கு முன்னாடியே புலி அவனை சாப்பிட்டது.
நீதி: பேராசை பெரும் நஷ்டம்.