26. நாய் வாலை நிமிர்த்தல்! | தமிழ் கதைகள் | Dog Tail Straightening! | tenali Raman story

26. நாய் வாலை நிமிர்த்தல்! | தமிழ் கதைகள் | Dog Tail Straightening! |tenali Raman story

“ஒரு நாயின் வளைந்த வாலை நீட்டி நேராக்க முடியுமென்றால் மனிதனின் கோணலான சுபாவத்தையும் இயற்கையான சக்தியையும் பயிற்சியின் மூலம் மாற்றியமைக்க முடியுமல்லவா?” என்று இராயர் தம்முடைய அரசவையில் கேட்டபோது, “முடியும்!” என்று சொன்ன அறிஞர்களெல்லாம் நாய்களின் வளைந்த வால்களைப் பலவித உபாயங்களின் மூலம் நிமிர்த்தி நேராக்க முயன்றும் முடியாமல் தோல்வியுற்றனர். 

தெனாலிராமனோ ஒரு நாயை பல நாட்களாகப் பட்டினி போட்டு வாலைத் தூக்கிச் சுருட்டக்கூடச் சக்தியில்லாதபடி செய்தான். அதனால் தொங்கிக்கிடந்த நாயின் வால் நேராகவும், நீளமாகவும் காணப்பட்டது. அதை இராயருக்கு இராமன் சுட்டிக்காண்பித்து, “அரசே! நாயை நன்றாக உணவு கொடுத்து வத்தல் அது குஷியாகத் தன் வாலை மேலும் சுருட்டிக் கொண்டிருப்பதைத்தான் காணமுடியும்.

இயற்கைக்கு முரண்பாடாக அதன் நீட்டி நேராக வாலை மாறும்படிச் செய்ய வேண்டுமானால் பட்டினியாலும் சாவாலும்தான் அதைச் சாதிக்கமுடியும் . அதுபோன்றது தான் மனிதரின் இயற்கையும்!” என்று விளக்கினான்.



Leave a Comment