13. கடனைத் தீர்த்த வழி | தெனாலி ராமன் கதைகள் | The way to pay off debt | tenali Raman story

13. கடனைத் தீர்த்த வழி | தெனாலி ராமன் கதைகள் | The way to pay off debt | tenali Raman story

ஒரு சமயம் அரசரிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வழியின்றித் தவித்த தெனாலி ராமன் கடனைத் தீர்க்க ஒரு உபாயம் செய்தான் அதன் பிரகாரம் கடனை வசூலிக்க இராமனின் வீட்டுக்கு இராயர் வந்தபொழுது இராமனின் மனைவி,

“அரசே கடன் பாரம் தாங்காமல் என் கணவர் கவலைப் பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். கடன் தீர்ந்து விட்டதென்று தாங்கள் அவர் காது குளிரச் சொன்னால்தான் அவருடைய ஆத்மா சாந்தியடையும்!” என்றாள்.

tenali Raman wife
tenali Raman wife

அப்போது இராயர் மனம் வருந்தி, “ராமா! நீ எனக்குத் தரவேண்டிய கடன் தீர்ந்துவிட்டது. கவலையின்றி நீ சாகலாம்” என்றார். அதைக் கேட்டதும் படுக்கையில் கிடந்த இராமன் குபீரெனத் துள்ளியெழுந்து “அரசே! தாங்கள் கொடுத்த கடனஈல் சாகக்கிடந்தேன். 

கடன் தீர்ந்ததென ராஜவாக்குக் கிடைத்ததும் புத்துயிர் பெற்று எழுந்துவிட்டேன்” என்று சிரித்தான். 



Leave a Comment