ஒரு ஊரில் ஒரு குயவர் இருந்தார். அவர் இரண்டு பானைகளை வைத்திருந்தார். அதனால் தண்ணி எடுத்து வர ஒரு குச்சியை எடுத்து இரண்டு பக்கமும் கயிறு கட்டி அந்தக் கயிறுகளில் இரண்டு பானையையும் தொங்கவிட்டு அந்த குச்சியை தன்னுடைய தோளில் வைத்துவிட்டு அருகில் இருந்த குளத்திலிருந்து தண்ணிர் எடுத்து தன்னுடைய வீடு வரைக்கும் அவர் சுமந்து நடந்து வருவார்.
கொஞ்ச நாள் இப்படியே போயிட்டு இருந்து அப்புறமா அந்த இரண்டு பானைகளில் ஒரு பானையில் மட்டும் ஒரு சின்ன கீறல் விழுந்தது.
தண்ணீர் எடுக்கும் போது இரண்டு பானைகள் முழுவதும் தண்ணீர் இருக்கும். வீட்டுக்கு கொண்டுவந்து வைக்கும்போது அந்த கீறல் விழுந்த பானையில கால் பானை தண்ணீர் குறைந்து இருக்கும். கொஞ்ச நாளைக்கு அவருக்கு எதனால் அந்த பானையில் தண்ணீர் குறைந்து விடுகிறது என்று தெரியவில்லை, அப்புறமா அவர் கண்டுபிடித்தார் அதில் ஒரு சின்ன கீறல் இருக்கிறது என்று. ஆனாலும் அவர் அந்த பானையை மாற்றவே இல்லை அதே பானையை பயன்படுத்தி தான் தண்ணி எடுத்துட்டு வருவார்.
ராத்திரி வேளைகளில் அவர் தூங்கினதுக்கு பின்னாடி இந்த இரண்டு பானைகளும் ஒன்றுக்கொன்று பேசுமாம். அதுல இந்த குறையே இல்லாத நேர்த்தியான பானை இந்த கீறல் விழுந்த பானைய பார்த்து நம்ம ரெண்டு பேரையும் வைத்து ஒரே அளவு தண்ணீர் எடுத்துகிட்டு வராரு, நான் என்னடான்ன முழு தண்ணீரையும் வீட்டில் கொண்டுவந்து வைக்கிறேன்,நீ என்னடான்னா அதுல பாதி தண்ணிய கொட்டிக்கிட்டு மீதி தான் இந்த வீட்டுக்கு எடுத்துட்டு வர. அவருக்கும் தெரியும் உன்னிடம் கீறல் இருக்கிறது என்று, ஆனாலும் அவர் உன்னை தூக்கி போடாமலேயே வைத்திருக்கிறார், ஏன் என்று தெரியல அப்படின்னு சொல்லிட்டு இருந்தது.
இந்த கீறல் விழுந்த பானைக்கு இதனுடைய மனசுல ஒரு கவலை உண்டாக ஆரம்பித்தது, எதுக்கு குயவர் என்ன கூட வைத்திருக்கிறார் ? அவர் நினைத்திருந்தால் என்ன தூக்கி போட்டிருக்கலாமே. நமக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் கண்டிப்பாக இந்த கேள்வியை அவர் கிட்ட கேக்கணும்னு என்று நினைச்சிட்டு இருந்தது.
ஒரு ஊர்ல ஒரு குயவர் இருந்தாராம். அவர் இரண்டு பானைகளை வைத்திருந்தார்,தண்ணி எடுத்துட்டு வர ரெண்டு பக்கமும் கயிறு கட்டி அந்தக் கயிறுகளில் அந்த பானையைத் தொங்கவிட்டு அந்த குச்சியை தன்னுடைய தோல வச்சிக்கிட்டு ,அந்தக் குளத்தில் இருந்து தண்ணி எடுத்து தன்னுடைய வீடு வரைக்கும் அவர் சுமந்து நடந்து வருவார். கொஞ்ச நாள் இப்படியே போயிட்டு இருந்து அப்புறமா அந்த இரண்டு பானைகளில் ஒரு பானையில் மட்டும் ஒரு சின்ன கீறல் விழுந்து.
தண்ணீர் எடுக்கும் போது இரண்டு பானைகளையும் பாத்தீங்கன்னா முழுக்க முழுக்க தண்ணீர் இருக்கும். வீட்டுக்கு கொண்டுவந்து வைக்கும்போது அந்த கீறல் விழுந்த பானையில கால் பானை தண்ணீர் குறைந்து இருக்கும். கொஞ்ச நாளைக்கு அவருக்கு எதனால் அந்த பானையில் தண்ணீர் குறைந்து விடுகிறது என்று தெரியல, அப்புறமா அவர் கண்டுபிடித்தார் அதில் ஒரு சின்ன கீறல் இருக்கிறது என்று. ஆனாலும் அவர் அந்த பானையை மாற்றவே இல்லை அதே பானையை பயன்படுத்தி தான் தண்ணி எடுத்துட்டு வருவார்.
ராத்திரி வேளைகளில் அவர் தூங்கினதுக்கு பின்னாடி இந்த இரண்டு பானைகளும் ஒன்றுக்கொன்று பேசுமாம். அதுல இந்த குறையே இல்லாத நேர்த்தியான பானை இந்த கீறல் விழுந்த பானைய பார்த்து நம்ம ரெண்டு பேரையும் வைத்து ஒரே அளவு தண்ணீர் எடுத்துகிட்டு வராரு, நான் என்னடான்ன முழு தண்ணீரையும் வீட்டில் கொண்டுவந்து வைக்கிறேன்,நீ என்னடான்னா அதுல பாதி தண்ணிய கொட்டிட்டு மீதி தான் இந்த வீட்டுக்கு எடுத்துட்டு வர. அவருக்கும் தெரியும் உன்னிடம் கீறல் இருக்கிறது என்று, ஆனாலும் அவர் உன்னை தூக்கி போடாமலேயே வைத்திருக்கிறார், ஏன் என்று தெரியல அப்படின்னு சொல்லிட்டு இருந்திச்சாம்.
இந்த கீறல் விழுந்த பானைக்கு அதனுடைய மனசுல ஒரு கவலை உண்டாக ஆரம்பிச்சிடுச்சு, எதுக்கு அவர் என்ன கூட வைத்திருக்கிறார் ? அவர் நினைத்திருந்தால் என்ன தூக்கி போட்டிருக்கலாமே. நமக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் கண்டிப்பாக இந்த கேள்வியை அவர் கிட்ட கேட்டிருக்கலாம் என்னு நினைச்சிட்டு இருந்தாம்.
ஒரு நாள் ராத்திரி அந்த பானை அது மனசுல நினச்சு கவலைபடுறது எல்லாம் அந்த குயவருக்கு கேட்க ஆரம்பிச்சிடுச்சு. அடுத்த நாள் காலையில் வழக்கம் போல இந்த இரண்டு பானைகளையும் அந்த கம்பில் கட்டி அந்த குயவர் தன்னுடைய தோளில் வைத்து நடந்து போக ஆரம்பித்தார்.
அவருடைய வீட்டிலிருந்து ஒரு இருபது அடி நடந்து போன அப்புறம் பானைகள் இரண்டையுமே கீழே இறக்கி வைத்தார். இறக்கி வச்சுட்டு அந்த கீறல் விழுந்த, பாதிக்கப்பட்ட பானைய அப்படியே பின்னாடி திரும்பி பாரு என்றார். அப்படியே பின்னாடி திரும்பி பார்த்தா அந்த 20 அடியிலிருந்து அவருடைய வீட்டுக்கு போற அந்த தூரம் வரைக்கும் ஒரு பாதை இருக்கு, அந்த பாதையில் ரெண்டு பக்கமும் பூச்செடிகளா இருந்திச்சு. அதுல ஒரு பக்கம் இருந்த பூச்செடி வளர்ந்து நிறைய பூக்கள் பூக்க ஆரம்பித்து இருந்து. இன்னொரு பக்கம் இருக்கிற பூச்செடிகள் பார்த்த அத விட கொஞ்சம் கம்மியா வளர்ந்திருந்தது. இந்த கீறல் பானை எப்பவுமே கவலையோட இருக்கும், அதனால பூச்செடிகளை இதுவரைக்கும் பார்த்ததே கிடையாது. இப்போது தான் முதல் முறையாக பார்க்குது, ஆனாலும் இவரு எதுக்கு இத நம்பள பாக்க சொல்றாரு என்று அதற்கு புரியல.
அப்பதான் இந்த குயவர் பதில் சொல்கிறார், ஒரு சில நாட்களுக்கு முன்னாடியே எனக்கு உன்கிட்ட கீறல் விழுந்த விஷயம் தெரியும். அப்ப நானும் உன்ன மாத்தி வெளியே போட்டுட்டு, இன்னொரு பானை செஞ்சு அதை பயன்படுத்தனும், என நினைச்சேன் அப்படியே நினைச்சிட்டு இருக்கும்போதுதான் அடுத்த நாள் என்னோட பாதையில் நடந்து போகும் போது இந்த ஒரு பக்கம் மட்டும் நிறைய செடிகள் வளர்ந்து இருந்ததை பார்த்தேன். அப்புறம் யோசிச்சு பாத்தா தான் தெரிஞ்சது நான் உன்னை எப்பவுமே வலது பக்கமாக வைத்து எடுத்துட்டு வருவேன், அப்படி வலது பக்கமா எடுத்துட்டு வரும்போது உன்கிட்ட இருந்து தண்ணி விழுந்து விழுந்து தான் அந்த இடத்தில் பறவைகள் போட்ட விதையெல்லாம் முளைச்சு எப்படி செடியா இருக்கு. அப்படின்னு சொல்லி அதுக்கப்புறமா நான் வழக்கமாக வலது பக்கம் உன்னை தூக்கிட்டு வரத மாத்தி, இடது பக்கம் ஒரு நாள் வலது பக்கம் ஒரு நாள் என்று மாத்தி மாத்தி எடுத்திட்டு வர ஆரம்பிச்சேன்.
அப்படி தூக்கிட்டு வந்ததுனால இடது பக்கமும் செடிகள் வளர்ந்து வலது பக்கமும் செடிகள் வளர ஆரம்பிச்சது. ஆரம்பத்திலேயே வளர்ந்ததனால் அந்த வலது பக்கத்தில் உள்ள செடிகள் நல்ல பெருசா வளர்ந்து இருக்கு கொஞ்ச நாள் கழிச்சு வளந்ததுனால இந்த இடது பக்கத்தில் உள்ள செடிகள் கொஞ்சம் சின்னதா வளர்ந்து இருக்கு. ஆனா மொத்தத்துல இந்த பாதையில் ரெண்டு பக்கம் வந்திருக்கிற இந்த செடிகளுக்கும் நீதான் காரணம். ஒருவேளை உன் பக்கத்துல இருக்கிற அந்த பானையை மாதிரி உன்கிட்ட அந்த கீறல் விழாம இருந்திருந்த இந்த பாதையில் செடிகள் முளைக்கும், அப்படிங்கிறது எனக்கு தெரியாம இருந்திருக்கும். அதனால உன்கிட்ட கீறல் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு ஒரு நாளும் வருத்தப்படாத. உன்னுடைய கீறல் எனக்கு உதவியாகத் தான் இருந்ததே ஒழிய எந்த விதத்திலும் அது எனக்கு பயன் இல்லாமல் இல்லை. அதனை பயனுள்ளதா மாத்தினேன், அப்படின்னு சொல்லி அந்த குயவர் அதற்கு பதில் சொல்றாரு, கதை இதோடு முடியுது.
இந்த கதையிலிருந்து நல்ல பல கருத்துக்களை நாம் எடுத்துக்கலாம், நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் யோசிபோம் , எனக்கு மட்டும் எதற்காக இந்த குறை, எனக்கு மட்டும் ஏன் இந்தப் போராட்டம்? எல்லாருக்கும் சுலபமா கிடைக்கிற நிறைய விஷயங்கள் எனக்கு மட்டும் ஏன் போராடிப் போராடி கிடைக்கிறது? இந்த பானையில் மட்டும் கீறல் விழாம இருந்திருந்தா இந்த இடத்தில செடிகள் வளரும் என்பது அவருக்கு தெரிந்திருக்காது. அதே மாதிரி தான் நம்முடைய வாழ்க்கையிலே போராட்டங்கள் வரல அப்படின்னு சொன்னா, ஒரு சில குறைவுகள் இல்ல அப்படின்னு சொன்னா நம்ம வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி போகுதுனு நமக்கு தெரியாம போகும். நம்முடைய பலம் பலவீனம் இரண்டுமே, தெரிய இந்த சின்ன சின்ன போராட்டம் தான் வழி வகுக்கும். அதேமாதிரி தான் அந்த பானையில கீறல் இருக்குனு அந்த குயவர் அந்த பானைய தூக்கி போடல, ஒரு பக்கம் மட்டும் வளர்ந்திருக்கிறது தெரிஞ்சுகிட்டு இரண்டு பக்கமும் அந்த செடிகள் வளருறது மாதிரி மாத்தி மாத்தி உபயோகப்படுத்தினார். அதே மாதிரி பிரச்சனைகள் வரும் போது அதில் இருக்கும் வாய்ப்புகளை தேட ஆரம்பிக்கனும், அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள மட்டுமே யோசிக்கனும். யோசிக்கும் போது தான் நம்முடைய வாழ்க்கை இன்னும் இரண்டு மடங்கு மகிழ்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய குறைகளை நினைத்து நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க அப்டின்னு சொன்னா உங்களுக்கு வர போராட்டங்களைப் பார்த்து பயந்து போறீங்கனா, இந்த கதையை நிச்சயம் யோசிச்சு பாருங்க.
எல்லா விதத்திலும் வெற்றி உங்களுடையது ஆகட்டும்….