சிந்தித்து செயல்படு | தமிழ் கதைகள் | Think Before You Act | Moral Stories In Tamil

சிந்தித்து செயல்படு | தமிழ் கதைகள் | Think Before You Act | Moral Stories In Tamil

முன்பு ஒரு காலத்தில் கிராமத்தில் நாய் குட்டி ஒன்று இருந்தது. அந்த நாய்க்குட்டி தினமும் காலையில் வீடுகளுக்குப் பின்னால் சென்று அங்கே கிடைக்கும் உணவுகளை உண்டு வந்தது. ஒருநாள் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒரு பெரிய எலும்புத் துண்டு கிடைத்தது.

அதை எடுத்துக் கொண்டு அந்த நாய்க்குட்டி சந்தோஷமாக வீடு நோக்கி சென்றது. வீடு செல்ல ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலத்தின் மீது நடந்து செல்லும்போது அந்த நாய் ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரை எட்டிப்பார்த்தது. அதில் அதனுடைய உருவம் அங்கே தெரிந்தது.

அதன் உருவத்தைக் கண்ட நாய் குட்டி, ‘தண்ணீரில் வேறு ஏதோ ஒரு நாய் இருப்பதாகவும், அதன் வாயில் பெரிய எலும்புத் துண்டு இருப்பதாகவும் எண்ணியது. எப்படியாவது அந்த எலும்புத்துண்டை வாங்க வேண்டும் என்று தண்ணீருக்குள் குதித்தது’.

தண்ணீரில் குதித்த பிறகு தான் அங்கே வேறு நாயும் இல்லை எந்த எலும்புத்துண்டும் இல்லை, என்று அந்த நாய்க்குட்டிக்கு  புரிந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டி எப்படியோ பல நேரப் போராட்டத்திற்குப் பிறகு கரையை எட்டியது. 

அந்த நாய்க்குட்டி வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்து விட்டது. கரையை எட்டிய பின்பு நாய் தன் செயலை நினைத்து மிகவும் வருத்தப்பட்டது. மீண்டும் தன் உணவைத் தேடி அலைய வேண்டும் என்று வருத்தத்துடன் சென்றது.


நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.



Leave a Comment