குதிரையும் கழுதையும் | தமிழ் கதைகள் | Horse And The Donkey | Small Story In Tamil

குதிரையும் கழுதையும் | தமிழ் கதைகள் | Horse And The Donkey | Small Story In Tamil

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில், பண்ணையின் சொந்தக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு குதிரை ஒன்றும் கழுதை ஒன்றும் இருந்தன. குதிரைக்கு எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். ஆனால் கழுதைக்கு அதுபோல் கவனிப்பும், உணவும் கிடைக்கவில்லை. எனவே கழுதைக்கு எப்போதும் ஒரு மனக்கவலை இருந்தது.

“நான் நன்கு வேலை செய்தும் என்னை சரியாக கவனிக்கவில்லை, ஆனால் வேலையே செய்யாமல் இருக்கும் குதிரையை மிகவும் நன்றாக கவனிக்கிறார்கள்” என்று கழுதை எண்ணியது. நாட்கள் கடந்து சென்றன, ஒரு நாள் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது. பண்ணைக்காரன் தன் குதிரை மேல் ஏறி யுத்தத்திற்கு சென்றான்.

பல நாட்களுக்குப் பின் குதிரையையும், எஜமானனும் வீட்டிற்கு திரும்பினர். வீட்டிற்கு வரும்போது குதிரையின் காலில் பலமான அடி பட்டிருந்தது. காயத்தினால் உடல் புண்ணாகி இருந்த குதிரையைப் பார்க்க கழுதைக்கு மிகவும் பாவமாக இருந்தது.

இதுவரை குதிரைக்கு கிடைத்த உபசரிப்பு பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்தது கழுதைக்கு புரிந்தது. கழுதை குதிரை இடம் சென்று, “நண்பா, இந்நாள்வரை உனக்கு கிடைத்த உபசரிப்பை  நினைத்து நான் பொறாமை பட்டுள்ளேன். உன்னை நான் தவறாக எண்ணி உள்ளேன், தயவு செய்து என்னை மன்னித்துவிடு”  என்று கூறியது.

donkey tamil siru kathaigal

அன்று முதல் கழுதை குதிரையிடம் நட்பாக பழகியது. இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். அதுமட்டுமில்லாமல் கழுதை தன்னை  பண்ணைக்காரன் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்று கழுதை வருத்தப் படவுமில்லை.

நீதி : நமக்கு கிடைப்பதில் திருப்தி அடைய வேண்டும்.



Leave a Comment