நன்றி மறவாத புலி | கதை தமிழில் | Greatful Tiger | Small Story In Tamil

நன்றி மறவாத புலி | கதை தமிழில் | Greatful Tiger | Small Story In Tamil

முன்னொரு காலத்தில் ஒரு புலியும் ஒரு மனிதரும் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் இவர்கள் இருவரும் எப்படி நண்பர்களானார்கள்..? அது ஒரு பெரிய கதை….

நெடு நாட்களுக்கு முன்பு அந்த காட்டில் இந்தப் புலி வசித்து வந்தது. ஒரு நாள் அது உறுமிக் கொண்டே நடந்து சென்றது. உறுமிக் கொண்டே செல்லும்போது, அது முள்ளின் மீது கால் வைத்தது, முள் குத்தியதில் வலியால் மிகவும் துடித்தது.

அது தானாகவே அந்த முள்ளை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் புலியால் அந்த முள்ளை எடுக்க முடியவில்லை. அது வலி தாங்க முடியாமல் மிகவும் கத்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த மனிதன் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தான். அவன் காதில் இந்த சத்தம் விழுந்தது.

“என்ன சத்தம் இது? ஏதோ ஒரு மிருகம் வலியால் துடித்துக் கொண்டிருப்பது போலிருக்கிறதே” என்று அந்த சத்தத்தை  கவனித்துக்கொண்டே புலி இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அந்தப் புலியை பார்த்து “அடக்கடவுளே! இது ஒரு புலி ஆச்சே..” என்று பயந்தான் இருந்தும் பாவம் பார்த்து அந்த புலிக்கு உதவ மனிதன் முன்வந்தான். மெதுவாக நடந்து அதன் அருகே சென்று அந்த முள்ளை புலியின் காலிலிருந்து எடுத்து விட்டான். புலி நன்றியோடு அந்த மனிதன் முகத்தில் நக்கிக் கொடுத்தது. அந்த மனிதனுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் அதன் வழியே சென்றது.

சில நாட்களுக்குப் பிறகு கொள்ளைக்காரர்கள் அந்த காட்டுக்கு வந்து விலங்குகளை பிடித்து கிராமத்துக்கு கொண்டு சென்று அவற்றை கூண்டில் அடைத்து வைத்தார்கள். அதில் புலியும் இருந்ததது. வெளியே இருந்த மனிதர்கள், “ஒரு புலி மனிதன் கூட சண்டை போடுவதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது” என்று ஆரவாரம் சொல்லி ஒரு மனிதனை  தூக்கி புலி இருந்த கூண்டுக்குள்ளே போட்டார்கள்.

புலி அந்த மனிதன் மீது பாயத் தயாராக இருந்தது. ஆனால் திடீரென்று நின்றுவிட்டது. அன்றைக்கு புலிக்கு உதவி செய்த அதே மனிதன் தான் அவர். வலிமையான அந்த புலி அந்த மனிதன் அருகே சென்று அவன் முகத்தில் நக்கிக் கொடுத்தது, அவரும் அந்த புலியை அன்புடன் அரவணைத்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் அவர்கள் தவறை உணர்ந்தார்கள். உடனே இருவரையும் கூண்டில் இருந்து வெளியே விட்டார்கள். அன்று முதல் புலியும் அந்த மனிதனும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

நீதி : எந்த நல்ல செயல் செய்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்கும்.



Leave a Comment