புலி தோல் போர்த்திய கழுதை | தமிழ் கதைகள் | Donkey Wrapped With Tiger Skin | Tamil Siru Kathaigal

புலி தோல் போர்த்திய கழுதை | தமிழ் கதைகள் | Donkey Wrapped With Tiger Skin | Tamil Siru Kathaigal

ஒரு கிராமத்துல பேராசைபிடித்த சலவை தொழிலாளி தன்னுடைய கழுதையோட வாழ்ந்து வந்தான். மிகவும் அதிகமான துணிகளை ஒரு மூட்டையாக கட்டி அந்த கழுதை முதுகில் ஏற்றி தினமும் நதிக்கரைக்கு துணிகளை துவைக்க போவான். அப்படி போற வழியில அவங்க ஒரு காட்டை கடக்க வேண்டியது இருந்துச்சு.

அதனால தினமும் அந்த சலவைத் தொழிலாளி இருட்டுறதுக்கு முன்பாக தன்னுடைய துணிகளை எல்லாம் துவைத்து கழுதையின் மேல் ஏற்றி வீட்டிற்கு திரும்ப வருவான். அவ்வளவு கடுமையாக வேலை செய்தாலும் அந்த கழுதைக்கு சாப்பிடுவதற்கு தீனி ரொம்பவே குறைவா தான் கிடைக்கும்.

அதனால அந்த கழுதை போகப்போக ரொம்பவே மெலிந்து போச்சு. அந்த சலவைத் தொழிலாளியும் கழுதை மெலிந்து போவதை கவனித்தான். ஒருநாள் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது, வரும் வழியில் ஒரு புலி இறந்து கிடப்பதை அந்த சலவைத் தொழிலாளி பார்த்தான்.

உடனே அந்த சலவைத் தொழிலாளி மனசுல ஒரு திட்டம் தோன்றியது. அந்த புலியோட உடம்புல இருந்த தோலை உரித்து எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டான். அன்று இரவே அந்த கழுதைக்கு புலித்தோலை போத்தி பக்கத்து பார்லி தோட்டத்தில் அந்த கழுதையை மேய விட்டான்.

 ரொம்பவே பசியில் இருந்த அந்தக் கழுதை வயலில் இருந்த எல்லாத்தையும் சாப்பிட்டிச்சு. இதே மாதிரி ரொம்ப நாள் தொடர்ந்துகிட்டே இருந்து. நாள் ஆக ஆக அந்த கழுதையும் நல்ல சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் குண்டாக ஆரம்பித்தது.

தன்னுடைய திட்டம் வெற்றியானதை நினைத்து அந்த சலவைத் தொழிலாளி ரொம்பவே சந்தோஷப்பட்டான். ஆனா ஒரு நாள் அந்த தோட்டத்தில் உள்ள விவசாயி தன்னோட தோட்டத்துல ஒரு புலி வந்து பார்லியை சாப்பிடுவதை பார்த்தார். அதை பார்த்த அவர் உண்மையிலேயே அந்த கழுதையை, புலி என்று நினைச்சு பயந்து ஓடிவிட்டார்.

இதே மாதிரி ஒரு நாள் அந்தக் கழுதை தோட்டத்தில பார்லி சாப்பிட்டுட்டு இருக்கும் போது தூரத்தில் ஒரு பெண் கழுதை கணைக்கும் சத்தம் கேட்டுச்சு. அதைக் கேட்டதும் இந்த ஆண் கழுதையும் திருப்பி கணைக்க ஆரம்பிச்சது. இதை கேட்டதும் அந்த விவசாயி ஓடி வந்து வெளியே பார்த்தார்.

புலித்தோல் போர்த்திட்டு  வந்திருப்பது கழுதை தான் என்பதை தெரிந்து கொண்ட விவசாயி ரொம்பவே கோவப்பட்டார். உடனே அந்த விவசாயி கழுதை மேல இருந்த புலி தோலை அகற்றி விட்டார். அப்புறம் ஒரு கயிறை எடுத்து அந்த கழுதை கழுத்துல மாட்டி தன்னுடைய வயலில் கட்டிப்போட்டார்.

அன்றையிலிருந்து விவசாயிக்கு அந்தக் கழுதை சொந்தமாச்சு. தன்னோட குறுக்கு புத்தியினாலும் பேராசையினாலும் அந்த சலவைத் தொழிலாளி தன்னுடைய கழுதையே இழந்திட்டான்.

நீதி : அதிக பேராசைப்பட்டு குறுக்கு வழியில் செல்பவன் கடைசியில் நஷ்டத்தையே சம்பாதிப்பான்.



Leave a Comment