பாம்புக்கு முனிவர் சொன்ன புத்திமதி | தமிழ் கதைகள் | Sage’s Advice To The Snake | Tamil Short Stories

பாம்புக்கு முனிவர் சொன்ன புத்திமதி | தமிழ் கதைகள் | Sage’s advice to the snake | tamil short stories

ஒரு நாள் சந்தையில் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அந்த சந்தையில் வியாபாரி ஒருவர் புடலங்காய் விற்றுக்கொண்டு இருந்தார். அந்த புடலங்காய் கட்டுக்குள் இருந்து பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்துச்சு, அதைப்பார்த்ததும் சந்தையில் இருந்த மக்கள் எல்லாரும் பயந்து ஓட ஆரம்பிச்சிட்டாங்க.

அதைப் பார்த்ததும் பாம்புக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சாம்.

 “ஹா ஹா ஹா, என்ன பார்த்து இவங்க எல்லாரும் இப்படி பயந்து ஓடுறாங்க இத பார்த்தா எனக்கு சிரிப்புதான் வருது” அப்படி எண்ணியது அந்த பாம்பு.

அந்தப் பாம்பு தினமும் ஊர் மக்களை பயப்படுத்திக் கொண்டே இருந்துச்சு. ஒருநாள் முனிவர் ஒருவர் அந்த வழியே வந்து கொண்டிருந்தார். அப்போ இந்த பாம்பு அந்த முனிவரை பயப்படுத்த முன்னாடி வந்திருச்சு. ஆனா அவரு பயப்படாமல் ரொம்பவே தைரியமாக இருந்தாரு. “உனக்கு பயமா இல்லையா” என்று அந்தப் பாம்பு முனிவரிடம் கேட்டது. “பயமா, உன்ன பார்த்தா எனக்கு சிரிப்புதான் வருது” என்று முனிவர் சொன்னார்.

நீ எதுக்கு உன் நேரத்தை மக்களை பயப்படுத்தி  வீணடிச்சுட்டு இருக்க, நீ என்ன நினைச்சுட்டு இருக்க இந்த மக்கள் எல்லாருமே உனக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்றா.. இல்ல எல்லாருமே உன்னை பார்த்து பயப்படுகிறார்கள். மக்கள்  யாருக்குமே உன்ன பிடிக்கல, அதனால உன்னோட செயலை மாத்திக்கோ அப்போ தான் எல்லாருக்கும் உன்ன பிடிக்கும்” என்று அந்த முனிவர் சொன்னார்.

முனிவர் சொன்னதைக் கேட்டு பாம்பு ரொம்பவே வருத்தம் அடைந்தது,  தன்னைத்தானே மாற்ற ரொம்பவே முயற்சி பண்ணுச்சு. சில நாட்களுக்குப் பின்பு அந்த முனிவர் அதே வழியில் வந்துட்டு இருந்தாரு. அப்போ அவர் பார்த்த காட்சி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பாம்பின் உடல் மிகவும் அடிபட்டு இருந்தது. அதைப் பார்த்த முனிவர், “உனக்கு என்னதான் ஆச்சு” என்று கேட்டார். 

அதற்கு அந்த பாம்பு, “சாமி நீங்க சொன்ன படியே நான் மக்கள் எல்லாரையும் பயப்படுத்துவதை நிறுத்தி விட்டேன், ஆனால் மக்கள் என்ன எங்கு பார்த்தாலும் அடிச்சுகிட்டு இருக்காங்க என்னால வலி தாங்க முடியல, என்ன பண்ணுறதுன்னு தெரியல” என்று சொன்னது. முனிவர் சொன்னார் “நான் உன்கிட்ட மற்றவர்களை பயப்படுத்தவோ, கொல்லவோ கூடாது என்று தான் சொன்னேன் சத்தம் போடக்கூடாது என்று சொல்லவே இல்லையே”. 

உன்னோட பாதுகாப்புக்காக தான் கடவுள் அந்த தன்மையே உனக்கு கொடுத்திருக்கிறார். தேவைப்படும்போது அதை நீ பயன்படுத்திக் கொள், ஆனால் எப்போதும் அதை தவறாக பயன்படுத்தாதே. சாமி சொன்னதோட அர்த்தத்தை அந்தப் பாம்பு புரிஞ்சுக்கிட்டு அவருக்கு நன்றி சொல்லிட்டு, அதோட இடத்துக்கே திரும்ப போச்சு.

நீதி : வலிமை இருப்பது தற்காப்பிற்காகவே.



Leave a Comment