குதிரையின் கர்வம் | தமிழ் கதைகள் | The Arrogance Of The Horse | New Story In Tamil

குதிரையின் கர்வம் | தமிழ் கதைகள் | The Arrogance Of The Horse | New Story In Tamil

ஒரு முறை ராஜாவோட தளபதி ஒரு கழுதையும், ஒரு குதிரையும் வச்சிருந்தார். அவர் குதிரையை போர்ல  சண்டை போடவும் கழுதையை  பொருட்களை தூக்கிச் செல்லவும் உபயோக படுத்தினார். 

தளபதி குதிரைக்கு நிறைய கவனத்தையும், அக்கறையும் குடுத்தார். ஆனால் அந்த கழுதைக்கு அவ்வளவு கவனம் கொடுக்கவில்லை. குதிரைக்கு பச்சை புல்லையும், தானியங்களும் கொடுத்தார். ஆனால் கழுதைக்கு புண்ணாக்கு மட்டுமே கொடுத்தார். சில நேரம் குதிரைக்கு உடம்பு சரி இல்லையென்றால் பக்கத்து ஊரில் இருக்க டாக்டரை வர வைத்து பாத்துப்பாரு. அதுவே கழுதைக்கு உடம்பு சரி இல்லையென்றால் ஒரு நொடி கூட கண்டுக்க மாட்டாரு. 

தளபதி  குதிரைக்கு இவ்வளவு கவனம் கொடுத்ததுனால குதிரை தன்ன ரொம்ப பெருமையாவும், கழுதையை ரொம்ப  கீழாகவும் பாத்துச்சு. ஒரு நாள் கழுதை ரொம்ப சோர்வாகி அதை எப்பவும் எங்க கட்டுவாங்களோ அங்க போய் ரெஸ்ட் எடுக்க போச்சு. அப்போ குதிரை, “உன் வாழ்க்கை இப்படி மூட்டை தூக்கி வேலை செய்வதுதான், நீ எப்பவுமே இப்படித்தான் இருக்கப் போற பாரு” என்றது. குதிரை சொன்னதை கழுதை பெருசா எடுத்துக்கல, ஆனால் குதிரை கழுதையை வம்பு இழுத்துக் கொண்டே இருந்திச்சு. 

திரும்ப குதிரை சொல்லிச்சு, “உன் வாழ்க்கையோட என் வாழ்க்கையை கம்பேர் பண்ணி பார்த்தா  உன்ன விட நான் தான் நிறைய வேலை செய்றேன்,  தளபதி அவரோட கண்ண போல என்ன பார்த்துகிறாரு, ஆனா உன்ன கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்கிறாரு”. அந்த சோர்வடைந்த  கழுதை, குதிரை சொன்னத கேட்டு சும்மா இருந்துச்சு. 

அடுத்த நாள்  வழக்கம்போல கழுதை ரெஸ்ட் எடுக்க அந்த இடத்துக்கு வந்த உடனே குதிரை மறுபடியும்  வம்பிழுக்க ஆரம்பிச்சது. “இன்னைக்கு நான் தளபதிக்கூட ராஜாவோட விளையாட்டு மைதானத்துக்கு போனேனே. நீ என்ன பண்ண?” என்று குதிரை கேட்டிச்சு. அதுக்கு கழுதை, “இன்னைக்கு நான் காட்டுக்குப் போய் நிறைய மரக்கட்டைகளை தூக்கிட்டு வந்தேன்” என்று சொல்லிச்சு. 

donkey tamil siru kathaigal

அதற்கு குதிரை, “ஹா ஹா ஹா… உனக்கும் எனக்கும் இருக்க வித்தியாசத்தை பார்த்தியா உன்ன விட நான் எவ்வளவோ பரவாயில்லை” என்று சிரித்துக்கொண்டே கழுதையிடம் சொல்லியது.  கழுதை அதோட மனசுல, “இனி அமைதியாக இருந்து ஒரு பயனும் இல்லை, நாளுக்கு நாள் இந்த குதிரை ரொம்ப கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திட்டு இருக்கு, நேரம் வரும்போது சரியான பாடத்தை இந்த குதிரைக்கு சொல்லி தரணும்”. என்று நினைத்துக் கொண்டது. 

குதிரை சொன்னத கேட்டு கழுதை ரொம்ப அமைதியா இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எல்லா பக்கத்து நாடுகளும் ஒன்னா நண்பர்கள் ஆயிட்டாங்க. அப்புறம் சண்டைக்கான காரணமே இனிமே இல்லை அதனால தளபதி குதிரையை முன்னாடி மாதிரி பராமரிக்கவில்லை. அப்படியே போனதுனால தளபதி குதிரையை கழுதையைப் போன்று பொருட்களை கொண்டுவர யூஸ் பண்ணாரு. குதிரை முன்ன பின்ன இதுபோல பொருட்களை தூக்கினதே இல்ல, அதனால ரொம்ப மெதுவா நடந்து பொருட்களை கீழே போட ஆரம்பித்தது. குதிரை நடந்துகிட்டத பார்த்து தளபதிக்கு ரொம்ப கோபம் வந்து அத திட்டினார், “உன்னால இந்த சின்ன மூட்டைகளை கூட ஒழுங்கா தூக்கிட்டு வர முடியாதா?”. 

வீடு வர தளபதி அந்த  குதிரையை திட்டிட்டு வந்தாரு. அந்த குதிரை சோகமா ரெஸ்ட் எடுக்கப் போகும் போது, கழுதை கேட்டிச்சாம், “நான் செய்யுற வேலைய நீ செய்யும் போது அதோட கஷ்டம் தெரியுதா?”. அப்போ குதிரை ரொம்ப வருத்த பட்டு கழுதை கிட்ட மன்னிப்பு கேட்டிச்சாம், “நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வேல பாக்குற நான் தான் உன்ன தப்பா பேசிட்டேன்” என்று மன்னிப்பு கேட்டிச்சாம். 



Leave a Comment