ஒப்புரவு ஒழுகு | ஆத்திசூடி கதைகள் | Act with high moral standards | tamil kathaigal

ஒப்புரவு ஒழுகு | ஆத்திசூடி கதைகள் | Act with high moral standards | tamil kathaigal

சிங்கம் காட்டுப்பாதை வழியாக வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது. அந்த நேரம் சிங்கத்தின் எதிரே ஒரு குரங்கு வந்தது.

“சிங்கராஜா! இவ்வளவு அவசரமாக எங்கே ஓடுகின்றீர்கள்? உங்கள் கால்கள் வலிக்காதா?” என்று அன்போடு கேட்டது குரங்கு.

அதனைக் கேட்ட சிங்கம் “குரங்கே! நான் வேட்டையாட வேண்டி ஒரு மானைத் துரத்திச் செல்கிறேன். அந்த மான் இந்தப் பாதையின் வழியாகத்தான் ஓடிவந்ததை கவனித்தேன்.

அதனை நீ பார்த்தாயா?” என்று கேட்டது. அதற்குக் குரங்கு “சிங்கராஜா! அந்த மான் இந்தப் பக்கம் வரவில்லை என்று நினைக்கிறேன். அப்படி வந்தால் உங்களுக்கு முன்னர் நான் அந்த மானை சந்தித்திருப்பேன்” என்று கூறியது.

உடனே சிங்கம், குரங்கிடம் வேறு எதுவும் பேச விரும்பாமல் தான் வந்த வழியாகத் திரும்பி ஓட முயற்சித்தது.

monkey tamil kathaigal 2
monkey tamil kathaigal 2

அதனைக் கண்ட குரங்கு “சிங்கராஜா! நான் சொல்கிறேன் என்று கோபப்படாதீர்கள். நீங்கள் அந்த மானைப் பிடித்து என்ன செய்யப் போகின்றீர்கள்? அதனை மட்டும் என்னிடம் தயவு செய்து தெரியப்படுத்துங்களேன்” என்று கூறியது .

அதனைக் கேட்ட சிங்கம் ஹ் ஹா… ஹா… என்று காடே அதிரும்படியாக சிரித்தது . பின்னர் குரங்கைப் பார்த்து “குரங்கே! இது கூடவா தெரியாமல் இருக்கின்றாய்? நான் அந்த மானைப் பிடித்து அடித்துக் கொன்று சாப்பிடப் போகின்றேன்!

மானின் சுவையான கறியைப் பற்றி உனக் கென்ன தெரியும்!” என்று குரங்கைப் பார்த்து கேலி செய்தது.

உடனே குரங்கு “சிங்கராஜா இந்தக் காட்டில் நீங்கள்தான் எல்லா மிருகங்களையும் வேட்டையாடி உண்டு வருகின்றீர்கள். ஆனால் உங்களை வேட்டையாடி உண்ணும் படியாக கடவுள் வேறு எந்த விலங்கையும் படைக்கவில்லை.

அதனால், பாவத்திற்கு அஞ்சாமல் எல்லா மிருகங்களையும் கொன்று தின்று வருகின்றீர்கள். ஆனால் உங்களையும் வேட்டையாடக் கூடியவர்கள் மனிதர்கள்தான்.

ஆனால் அந்த மனிதரில் ஒருவரே தனது ஆசைகளை எல்லாம் வெறுத்து இந்தக் காட்டில் முனிவர் கோலத்தில் தவமிருக்கின்றார்.

அந்த மனிதரே, மிருங்கங்களைக் கொன்று பாவம் செய்யாமல் துறவியாக வாழ்கின்ற போது , நீங்கள் மட்டும் உங்களோடு போராட முடியாத காட்டு மிருகங்களை கொல்கின்றீர்களே? இது தர்ம் ஆகுமா?” என்று கனிவோடு கேட்டது.

குரங்கின் வார்த்தைகள் எல்லாம் சிங்கத்தின் காதுகளில் ஈட்டி போல் பாய்ந்தன.

monk tamil kathaigal
monk tamil kathaigal

உட்னே குரங்கை ஏறிட்ட சிங்கம் “குரங்கே நீ சொல்வது நிஜமா? இந்தக் காட்டில் மனிதர் எவரேனும் தவக்கோலத்தில் வாழ்கின்றாரா” என்று ஆச்சர்யமாகக் கேட்டது.

அதனைக்கேட்டு திடுக்கிட்ட குரங்கு “சிங்க ராஜா எதற்காக அப்படிக் கேட்கின்றீர்? அந்த மனிதனையும் பிடித்து இரையாக்கப் போகின்றீர்களா?” என்று வியப்போடு கேட்டது.

உடனே சிங்கம் “குரங்கே நீ என்னைத் தவறாக எண்ண வேண்டாம். அந்த மனிதனுக்கு நான் ஏதாவது சேவை செய்து, புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.

நீ கூறிய வார்த்தைகள் எல்லாம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. இனிமேல் நான் பாவம் செய்யாமல் வாழ்வதாக முடிவு செய்து விட்டேன். மாமிசத்தை உண்டு உண்டு மதிகெட்டு அலைந்த எனக்கு உன் அறிவுரைகள் நான் திருந்துவதற்கு வழி செய்துவிட்டது.

இனி நான் அந்த மானைத் தேடிப்போக மாட்டேன். இன்று முதல் எந்த உயிரினத்தையும் வேட்டையாடாமல் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தாவரங்களை உண்டு வாழ்வதாக முடிவு செய்துவிட்டேன்.

இப்போதே நீ கூறிய அந்த முனிவரிடம் என்னை அழைத்துச் செல்” என்று கூறியது சிங்கம். குரங்கு மகிழ்ச்சியுடன் சிங்கத்தை நோக்கியது.

“சிங்கராஜாவே! நல்லவரைப் பற்றி உன்னிடம் பேசியதால் உன் மனமும் நல்லதாகவே மாறி விட்டது” என்று கூறியது.

நீதி:
நல்லவர்களுடன் சேர்ந்து அவர்கள் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழ வேண்டும்.

Leave a Comment