தெளிவு | Clarity | tamil kathaigal

தெளிவு | Clarity | tamil kathaigal

செந்திலும் கார்த்தியும் பேசிக்கொண்டே நடந்தார்கள். கார்த்தி அண்ணன். செந்தில் கார்த்தியின் சித்தப்பா மகன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை செந்தில், “வாத்தியார் அக்கா வீட்டுக்குப் போவோம் ஏதாச்சும் வேலை இருக்கும்” என்றான்.

“டேய் கார்த்தி அங்க வந்து கத்தக்கூடாது. நான் தொட்டி கழுவுறேன். நீ செடிக்கு தண்ணி ஊத்து.”

“சரி வா.”

அந்தத் தெருவில் செல்வி டீச்சர் வீடு இருந்தது. டீச்சரின் கணவரும் டீச்சர்தான் வார வாரம் செந்திலும் கார்த்தியும் ஏதாவது வேலை செய்து கொடுப்பார்கள் எல்லாம் சிறு சிறு வேலைகள் தான்.


தண்ணீர் தொட்டி கழுவி விடுவது, தோட்டத்து செடிகளுக்கு நீர் ஊற்றுவது, கடைக்குப் போய் வருவது, புல் செதுக்குவது இப்படிபட்ட வேலைகள் செய்தார்கள.

வேலை முடித்தப்பின், சாப்பிட சாப்பாடு கிடைக்கும். நொறுக்குத்தீனி கிடைக்கும். கூடுதலாய் சில்லறைக் காசும் கிடைக்கும்.

செல்வி டீச்சர் வீட்டு வாசலில் போய் நின்று “அக்கா, அக்கா” என்று கூப்பிட்டார்கள், செந்திலும் கார்த்தியும்.

செல்வி டீச்சர் வெளியே வந்தாள்.

“என்னடா?”

“தொட்டி கழுவுறோங்க்கா.. செடிகளுக்கு தண்ணி ஊத்தறோம்.. கடைக்கு போய்ட்டு வரேங்க்கா.. வேல இருக்கா.. பசிக்குதுக்கா..” என்றார்கள்.

“போன வாரம் தானே தொட்டி கழுவுனீங்க… அடுத்த வாரம் பாக்கலாம்… இருங்க ஏதாச்சும் திங்க எடுத்துட்டு வரேன்.”

“வேண்டாங்க்கா”

“ஏன்டா பசிக்குதுன்னீங்க?”

“பசிக்குதுக்கா ஆனா வேல கொடுங்க செஞ்சுட்டு சாப்பிடறோம்” என்றார்கள்.

child-worker-tamil-story
Child-worker-tamil-kathaigal

செல்வி அவர்களை யோசனையுடன் பார்த்து

“சரி, செந்தில் நீ தொட்டி தண்ணிய சுத்தமா எடுத்து ஊத்திட்டு பிளிச்சிங் பவுடர் போட்டு தரைய தேய்ச்சுவுடு… கார்த்தி நீ ட்யூப்லே செடிங்களுக்கு தண்ணி பாய்சு” என்றார்.

பரபரப்பாக இருவரும் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளும் முடிந்தது.

“அக்கா வேலய முடிச்சிட்டோம்..”


“இருங்கடா வரேன்” என்று உள்ளே போனாள்.

இருவரும் வீட்டுப்படியில் உட்கார்ந்தார்கள் முகமெங்கும் வியர்வை ஓடியது. பசிவேறு களைத்துப் போயிருந்தார்கள் காலையில் அவித்த இட்லி இருந்தது. இரண்டு தட்டில் வைத்து எடுத்து வந்தாள். சாம்பார், இட்லி பொடி வைத்து எண்ணெய் ஊற்றினாள்.


“சாப்பிடுங்கடா” என்று சொல்லி அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

“கார்த்தி யார் வூட்டுலே சாப்பிடறீங்க?”

“சித்தி வீட்டிலேதான்”

“உங்கப்பா.”

“அவருக்கு சோறு போட முடியாதுன்னு சித்தி சொல்லிடுச்சு”

“ஏண்டா?”

“குடிச்சுப்புட்டு கெட்ட வார்த்தை சொல்லி திட்டறாரு அதனாலதான்”

“உங்கப்பா வேலைக்குப் போறாரா?”

“ஆமா சம்பளத்த முழுக்க குடிச்சிப்பிட்டு வந்துடறாரு. சித்தி திட்டுது.
சித்தப்பா வராதேன்னுட்டாரு. நாங்க வேலைக்கு வந்துட்டோம்…”

“உன் தம்பி எங்கே?”

“அவன் மட்டும் படிக்கறாங்க்கா அவனுக்குத் தான் காசு சேக்கறேன்.” என்றான்.


“கார்த்தி, காசு சேக்கறியா?”

“ஆமாங்க்கா… நீங்க சாப்பாடு போட்றீங்க, நீங்க கொடுக்குற காச உண்டியல்ல போட்டுட்டு வரேன். இதுவரைக்கும் நூறு ரூபாய் சேந்துடுச்சி… எங்க அக்கா வரப்ப தம்பிக்கு எடுத்து கொடுத்து விடுவேன்.”


“தம்பி என்ன படிக்கிறான்?”

“இப்போ ஆறாவது போறான் எங்கம்மா அவனைப் படிக்க வைக்கனும்னு ஆசப்பட்டிச்சி”

செத்துப்போன அம்மாவை நினைத்தவுடன் கார்த்தி கண் கலங்கினான் செல்விக்கு என்னவோ போலிருந்தது.

வறுமை இருப்பினும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற உறுதி… தம்பியைப் படிக்க வைக்கும் உயர்ந்த குணம்.. அவளுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

“இன்னும் இட்லி வேணுமாடா?”

“வேண்டாங்க்கா கொஞ்சமாத்தான் சாப்பிடணும்”

“ஏண்டா?”

“அப்பத்தான் நிறைய நேரம் வேல பாக்கலாம், காசு கிடைக்கும். தம்பிய பிடிக்க வக்கணும். இவனும் காசு சேக்கிறான் என் தம்பிக்காக..”

“ஆமாம்” என்பது போல செந்தில் தலையாட்டினான். சாப்பிட்டு முடித்து தட்டைக் கழுவிக் கொண்டு வந்து செல்வி கையில் கொடுத்தார்கள் செல்வி உள்ளே போய் காக எடுத்து வந்து கேட்டாள்.

“எவ்ளோடா வேணும்?”ஆளுக்கு அஞ்சு ரூபா கொடுங்கக்கா” கொடுத்தாள் வாங்கிக் கொண்டார்கள் .

“வரோங்க்கா… கம்பெனிக்குப் போகணும்.”

“எந்த கம்பெனிக்குடா போறீங்க?”

“அப்பளக் கம்பெனிக்குக்கா”

“அங்க என்ன செய்வீங்க?”

“அப்பளம் காய வைப்போம். அடுக்குவோம்…
லேபிள் ஒட்டுவோம்…”

“எவ்வளவு சம்பளம்?”

“தினம் இருவது ரூபா…”

“அடேங்கப்பா.”

“ஆமாங்க்கா… எல்லாம் தம்பிய படிக்க வக்கத்தான்.”

“கலக்டருக்கு..” என்று சட்டென்று பதில் சொல்லி தெருவில் இறங்கி நடந்தார்கள்.

Leave a Comment