பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது | பழமொழிக் கதைகள் | tamil story

மன உறுதி கொண்டவர் – செயலில் உறுதி கொண்டவராக இருப்பர்.

 ஆனால் அதை தவிர மற்ற உறுதிகள் உண்மையானவை அல்ல என்பது வண்ணதாசனின் எண்ணம்.

 வானவியல் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தான். 

தான் ஆராய்ச்சியில் கண்டு பிடித்து வருவனவற்றை மற்றவர்களிடம் அவ்வப் போது சொல்லி வந்தபோது, அனைவரும் பாராட்டினர்.

 பலவித பரிசுகளையும் பெற்று வந்தான். வானவியலுக்காக வானத்தையே இரவு பகலாக உற்று நோக்கி வந்தான். அதனால் தனது சுற்றுப்புறத்தை மறந்திருந்தான்.

 உண்டு உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் வானத்தைப் பற்றிய ஆராய்ச்சியிலே மூழ்கிவந்தான். வானத்தைப் பார்த்து நடந்தானேயன்றி தரையைப் பார்த்து நடப்பதில்லை.

 வழியில் போவோர் வருவோரெல்லாம், வண்ணதாசனை வினோதமாகப் பார்த்து விட்டுச் செல்வார்கள். வானத்தையே பார்த்து நடப்பதினால், தரையிலிருக்கும் மேடு-பள்ளங்கள்- முள்-கற்கள் என எதையும் மறந்து வந்தான்.

 அதனால் சில நேரங்களில் கை கால்களில் அடிபட்டு காயங்களுக்கும் உள்ளாகி உள்ளான்.

 அப்படியிருந்தும் வானத்தைப் பார்த்து நடப்பதனை நிறுத்தவில்லை. வழக்கம் போல ஒரு நாள் இரவு பௌர்ணமி நிலவில், ஆங்காங்கே தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தவண்ணம் சென்று கொண்டிருந்தான், சிறிது தூரம் சென்றவுடன், வானத்தில் பறப்பது போன்ற உணர்வு.

பறந்த சில நொடிகளில் தொப்பென்ற சத்தத்துடன்… நீர் எழும்புவது போன்ற உணர்வு உற்றுப்பார்த்தான். நான்கு திசைகளிலும் கற்களால் கட்டப்பட்டு மரம் – செடிகளால் பின்னப் பட்டிருந்த ஆழமான கிணற்றில் தான் விழுந்திருப்பது தெரியவந்தது.

 பதறியவன் வானத்தை நோக்கி,” அய்யா! கிணற்றில் விழுந்து கிடக்கும் என்னை யாராவது காப்பாற்றுங்களேன்’ என்று குரல் கொடுத்தான். 

இது நெல் களம் அருகே காவலுக்கு இருந்த ஒருவரின் காதில் விழ, ஓடிவந்து பார்த்தபோது வண்ணதாசன் ஆழமான கிணற்று நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. தன் ஒருவனால், வண்ணதாசனை கிணற்றிற்கு மேலே தூக்க இயலாது என்று நினைத்த காவற்காரன், ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் ஊருக்குச் சென்று ஆட்களைத் திரட்டி, பல வீட்டு கயிறுகளையெல்லாம் ஒன்று சேர்த்து கட்டி, பெரிய தடக்கயிறு ஒன்றின் மூலம் கிணற்றுக்குள் இறக்கி, அதில் ஏறச் செய்து கிணற்றுக்கு மேலே தூக்கினர்.

வண்ணதாசன் அருகே வந்த விபரம் தெரிந்த ஒரு வயதானவர், “தம்பி! நீ ஆகாயத்தைப் பார்த்து ஆராய்ச்சி செய்வது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அதே நேரத்தில் பூமியில் தானே நாம் நடமாட வேண்டியுள்ளது. அத்தகைய பூமியை ஒரேயடியாய் மறந்து விட்டால் ஆகாயத்து ஆராய்ச்சியினால் என்ன பலன்.

 அதுமட்டுமில்லை, வெடிகுண்டுகளைப் போடுவதின் மூலமும் அணுகுண்டுகள் தயாரிப்பதின் மூலமும், கொலைகள் செய்வதின் மூலமும் எரிப்பதின் மூலமும் பூமியை அழுக்காக்குவது எந்த வழியில் நியாயமானது? ” வயதானவர் கேட்டது வண்ணதாசனை சிந்திக்க வைத்தது. 

முதலில் பூமியில் கவனம் செலுத்துவோம். என்பதனை உணர்ந்தான். இருப்பதைவிட்டு எப்போதும் பறக்க நினைக்கக் கூடாது.

Leave a Comment