கொடியோரை நம்பினால் குல நாசந்தான் | பழமொழிக் கதைகள் | tamil story

கெடுவான் கேடு நினைப்பான்  மட்டுமின்றி கொடியவர்களால் குலநாசந்தான் ஏற்படும்  என்ற நிலையும் உருவாகும்.

கணேஷ் – தினேஷ் – ரமேஷ் – மகேஷ் என்று நான்கு அண்ணன் தம்பியர் இருந்தனர் . அவர்களது தந்தை இறக்கும் போது நால் வருக்கும் வீடு – நிலம் – பணம் – நகைகள் என அனைத்தையும் சமமாக பிரித்துக் கொடுத்திருந்தார்.

தம்பி மகேஷ் , மூன்று அண்ணன்கள் மீது பொறாமைப்பட்டான் . மற்ற மூவர்களும் செல்வத்தை இழந்து, வறியவர்களாகி பிச்சைக்காரர்களாக தெருவில் திரிய வேண்டும் என்று எண்ணியிருந்தான்.

அவனது எண்ணத்திற்கு மெருகூட்டுவது போன்று கொள்ளைக் கும்பலை ஒருநாள் சந்தித்தான். அவர்களிடம் தன்னுடைய அண்ணன்களின் விலாசங்களை கொடுத்து கொள்ளையடிக்கச் சொன்னான்.

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு அண்ணன் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டன. மூன்று மாதங்கள் முடிந்தபின் நான்காவது மாதம் மகேஷின் வீட்டிற்கு அக்கொள்ளையர்கள் வந்தனர்.

அவர்களைப் பார்த்து “என்னுடைய அண்ணகள் மூன்று பேருடைய வீடுகளிலேயும் கொள்ளையடித்ததற்கு நன்றி, உங்களுக்கு சன்மானம் தருகிறேன்” என்றான்.

” நீ என்ன எங்களுக்கு சன்மானம் தர்றது. நாங்களே உங்க வீட்டிலே எங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்கிறோம், பீரோ சாவியைக் கொடு” என்று கொள்ளையர்கள் கேட்டனர். 

அதற்கு மகேஷ் ” இருந்த சொத்துக்களை யெல்லாம் இழந்து பரம ஏழையாகயிருக்கும் என்னிடத்திலே ஏது பணம் நகையெல்லாம் ?” என்று கேட்டான்.

” உன்னுடைய பணம் – நகைகளையெல்லாம் எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்ற விபரத்தை எல்லாம் உங்களுடைய அண்ணன்கள் சொல்லி விட்டனர் . அதனால் ஒழுங்காக சாவியைத் தரப் போறியா ? இல்லை , எங்களுடைய கொள்ளை குணத்தோட  கொலை குணத்தையும் காட்டவா ? ” என்று மிரட்டினர்.

உயிரிருந்தால் பணம் – நகைகளை சம்பாதித்துக் கொள்ளலாம். உயிர் போய்விட்டால்… என்று நினைத்தவன் பீரோ சாவியைக் கொடுத்தான். 

நகை – பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் சென்றனர்.

மற்றவர்களை மட்டம் தட்ட எண்ணி – கொடிய வர்களை நம்பி செயல்பட்டதால் அனைத்தையும் இழக்க வேண்டியது வரும் என்பதனை மகேஷ் உணர்ந்தான்.

Leave a Comment